அரச நிர்வாக சேவைகளில் 1200 வெற்றிடங்கள்

அரச நிர்வாக சேவைகளில் 1200 வெற்றிடங்கள்

by Staff Writer 06-11-2024 | 5:56 PM

Colombo (News 1st) பொது நிர்வாக சேவை உள்ளிட்ட பல அரச நிர்வாக சேவைகளில் 1200-இற்கும் மேற்பட்ட வெற்றிடங்கள் நிலவுவதாக பொது நிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு தெரிவித்துள்ளது.

பொது நிர்வாக சேவை மற்றும் கணக்காய்வு சேவைகளிலேயே அதிக வெற்றிடங்கள் நிலவுகின்றன.

குறித்த சேவைகளுக்கு ஆட்சேர்ப்பு பரீட்சைகள் தற்போது நிறைவடைந்துள்ளதுடன் பெறுபேறுகளின் அடிப்படையில் உத்தியோகத்தர்கள் இணைத்துக் கொள்ளப்படவுள்ளனர்.

பொறியியல் துறையிலும் 250-இற்கும் மேற்பட்ட வெற்றிடங்கள் காணப்படுகின்றன.

இந்த அனைத்து வெற்றிடங்களுக்கான ஆட்சேர்ப்பை துரிதகதியில் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளதாக அமைச்சின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

ஏனைய செய்திகள்