Colombo (News 1st) நெல் கையிருப்பு மற்றும் அரிசி கையிருப்பு தொடர்பில் தயாரிக்கப்பட்ட அறிக்கை ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவிடம் நாளை(06) கையளிக்கப்படவுள்ளது.
4 மாவட்டங்களில் முன்னெடுக்கப்பட்ட ஆய்வுகளில் பெறப்பட்ட தரவுகளின் அடிப்படையில் இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.
மாவட்ட ரீதியில் மேற்கொள்ளப்பட்ட கணக்கெடுப்புகள் தொடர்பான தகவல்கள் வர்த்தக அமைச்சின் செயலாளருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகார சபையின் தலைவர் ஹேமந்த சமரகோன் தெரிவித்தார்.
எவ்வாறாயினும், ஏனைய 10 மாவட்டங்களில் உள்ள அரிசி ஆலை உரிமையாளர்களிடம் காணப்படும் நெல் கையிருப்பு மற்றும் அரிசி கையிருப்பு தொடர்பான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுவருவதாக அவர் குறிப்பிட்டார்.
அடையாளம் காணப்பட்ட ஏனைய மாவட்டங்களிலுள்ள நெல் மற்றும் அரிசி கையிருப்பு தொடர்பில் ஆராய்ந்து அறிக்கை வழங்குமாறு அமைச்சினால் வழங்கப்பட்ட அறிவுறுத்தல்களுக்கு அமைவாக இந்த கணக்கெடுப்பு மேற்கொள்ளப்படுகிறது.