Colombo (News 1st) ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவின் புகைப்படத்தைப் பயன்படுத்தி போலியான முறையில் உருவாக்கப்பட்ட 5,000 ரூபா நாணயத்தாளை இணையத்தில் வௌியிட்டமை தொடர்பில் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பிலியந்தலையில் நேற்று(04) பிற்பகல் குறித்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டதாக குற்றப் புலனாய்வுத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
வட்டரெக்கவைச் சேர்ந்த ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.