பரீட்சைகள் திணைக்களத்தின் அறிக்கை

மனித உரிமைகள் ஆணைக்குழுவின் பரிந்துரைக்கமைய புலமைப்பரிசில் விடைத்தாள் மதிப்பீட்டை ஆரம்பிக்க திட்டம் - பரீட்சைகள் திணைக்களம்

by Staff Writer 16-10-2024 | 2:49 PM

Colombo (News 1st) சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகளை மனித உரிமைகள் ஆணைக்குழு வழங்கும் பரிந்துரைகளின் பின்னர் ஆரம்பிக்க திட்டமிட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

விடைத்தாள் மதிப்பீட்டிற்கான அனைத்து நடவடிக்கைகளும் தயார்படுத்தப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர குறிப்பிட்டுள்ளார்.

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் முதலாம் வினாத்தாளின் சில கேள்விகள் கசிந்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டு தொடர்பில் குற்றப்புலனாய்வுத் திணைக்களம் விசாரணைகளை ஆரம்பித்துள்ள நிலையில் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்நிலையில், தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் புள்ளிகள் மற்றும் வெட்டுப்புள்ளிகளை வெளியிடுவதற்கு இடைக்காலத் தடை விதிக்குமாறு கோரி உயர் நீதிமன்றத்தில் நேற்று(15) அடிப்படை உரிமை மனு தாக்கல் செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.