Colombo (News1st)
இலங்கை கிரிக்கெட் அணியின் பிரதான பயிற்றுவிப்பாளராக சனத் ஜயசூரிய நியமிக்கப்பட்டுள்ளார்.சனத் ஜயசூரிய இடைக்கால பயிற்றுவிப்பாளராக செயற்பட்ட இந்திய, இங்கிலாந்து மற்றும் நியூஸிலாந்து அணிகளுடனான போட்டிகளின் போது இலங்கை அணி வௌிப்படுத்திய திறமையை கருத்திற்கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனம் அறிவித்துள்ளது.
இம்மாதம் முதலாம் திகதி தொடக்கம் 2026ஆம் ஆண்டு மார்ச் மாதம் 31ஆம் திகதி வரை சனத் ஜயசூரிய புதிய பதவியில் நீடிக்கவுள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.