Colombo (News 1st) இஸ்ரேலினால் லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் 30க்கும் மேற்பட்ட ஏவுகணைத் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன.
நேற்றிரவு(05) இந்த தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
இஸ்ரேலினால் லெபனான் மீதான தாக்குதல்கள் ஆரம்பிக்கப்பட்ட நாள் முதல் நேற்றிரவு நடத்தப்பட்ட தாக்குதலே மிகவும் கொடூரமானதென லெபனானின் அரச பத்திரிகை செய்தி வௌியிட்டுள்ளது.
ஹிஸ்புல்லா அமைப்பின் கோட்டையாகக் கருதப்படும் தெற்கு லெபனான் பகுதிகளிலும் இஸ்ரேல் வான்வழித் தாக்குதல்களை நடத்தியதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
ஹிஸ்புல்லாஹ்வின் வாரிசு தலைவராக கருதப்படும் ஹாஷிம் சபிதீனை இலக்கு வைத்து மற்றுமொரு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.
எவ்வாறாயினும் இதுவரை உயிர்ச்சேதம் எதுவும் பதிவாகவில்லை.