Colombo (News 1st) நாட்டில் எலிக்காய்ச்சல் பரவல் அதிகரித்து வருவதாக சுகாதாரத் துறையினர் தெரிவித்துள்ளனர்.
வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் நாட்டில் 7500 பேர் எலிக்காய்ச்சலால் பீடிக்கப்பட்டுள்ளனர்.
எலிக்காய்ச்சலால் மரணிப்பவர்களின் வீதம், டெங்கு நோயாளர்களின் உயிரிழப்பு வீதத்தை தாண்டியுள்ளதாக பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் செயலாளர் சமிந்த முத்துகுட தெரிவித்துள்ளார்.