ஹிஸ்புல்லா அமைப்பின் தலைவர் கொல்லப்பட்டார்

ஹிஸ்புல்லா அமைப்பின் தலைவர் கொல்லப்பட்டார்

by Staff Writer 28-09-2024 | 8:25 PM

Colombo (News 1st) ஷேக் ஹசன் நஸ்ரல்லா கொல்லப்பட்டதை ஹிஸ்புல்லா அமைப்பு உறுதிப்படுத்தியுள்ளது.

லெபனான் தலைநகர் பெய்ரூட்டில்  நடத்தப்பட்ட தாக்குதலில் ஹிஸ்புல்லா அமைப்பின் தலைவர் ஷேக் ஹசன் நஸ்ரல்லா கொல்லப்பட்டதாக இஸ்ரேல் இராணுவம் அறிவித்தது.

நேற்றிரவு(27) மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் 64 வயதான ஹசன் நஸ்ரல்லா கொல்லப்பட்டதாக ஹிஸ்புல்லா அமைப்பு தெரிவித்துள்ளது.

பெய்ரூட்டில் ஹிஸ்புல்லா தளங்களை இலக்கு வைத்து இஸ்ரேல் விமான தாக்குதல்களை நடத்தியது.

இதனால் பல குடியிருப்பு கட்டடங்கள் தரைமட்டமாகியுள்ளன.

இந்நிலையில் தங்களின் திட்டம் முடிவடைய வில்லை எனவும் தமது மக்களுக்கு அச்சுறுத்தல் விடுக்கும் நபர்களை எவ்வாறு அணுக வேண்டும் என்பதை தாம் நன்கு அறிந்துள்ளதாகவும் இஸ்ரேல் இராணுவம் தெரிவித்துள்ளது.

எவ்வாறாயினும், இஸ்ரேலின் கொடூரமான தாக்குதல்களை எதிர்கொண்டு லெபனானை பாதுகாக்கும் நடவடிக்கைகளை முன்னெடுப்பதாக ஹிஸ்புல்லா அமைப்பு கூறியுள்ளது.

இதேவேளை, ஈரான்  ஆன்மீகத்தலைவர் அயாதுல்லா அலி கொமினி பாதுகாப்பான இடத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இஸ்ரேல் தாக்குதல்கள் அதிகரித்துள்ள நிலையில்  அவர் பாதுகாப்பான இடத்துக்கு மாற்றப்பட்டுள்ளார்.

ஹிஸ்புல்லா அமைப்பின் தலைவர் கொல்லப்பட்டதை தொடர்ந்து அடுத்தக் கட்ட நடவடிக்​கைகள் தொடர்பாக லெபனானுடன் இணைந்து ஆராய்வதாக ஈரான் குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை, இஸ்ரேல் வான்பரப்பை பயன்படுத்த வேண்டாம் என ஐரோப்பிய ஒன்றியம் விமான நிறுவனங்களுக்கு அறிவுறுத்தியுள்ளதும் குறிப்பிடத்தக்கது.