Colombo (News 1st) தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகளை 40 நாட்களுக்குள் வௌியிட எதிர்பார்ப்பதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
விடைத்தாள் திருத்தும் பணிகள் நாளை(16) ஆரம்பிக்கப்படவுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் தெரிவித்துள்ளார்.
தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை இன்று(15) இடம்பெற்றது.
நாடளாவிய ரீதியில் 2849 மத்திய நிலையங்களில் பரீட்சை நடைபெற்றதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இம்முறை புலமைப்பரிசில் பரீட்சைக்கு 323,879 பரீட்சார்த்திகள் தோற்றியுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.