7 புதிய முதலீட்டு வலயங்கள் - திலும் அமுனுகம

புதிய முதலீட்டு திட்டத்தின் கீழ் 7 புதிய முதலீட்டு வலயங்கள் - திலும் அமுனுகம

by Staff Writer 22-08-2024 | 8:03 AM

Colombo (News 1st) தற்போதைய அரசாங்கத்தின் புதிய முதலீட்டுத் திட்டத்தின் கீழ் 7 புதிய முதலீட்டு வலயங்களை நிறுவுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக முதலீட்டு ஊக்குவிப்பு இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.

மாங்குளம், பரந்தன், காங்கேசன்துறை, திருகோணமலை, இரணவில, ஹம்பாந்தோட்டை மற்றும் பிங்கிரிய ஆகிய பிரதேசங்களை அண்மித்து முதலீட்டு வலயங்கள் நிறுவப்படவுள்ளன.

இந்த ஆண்டிற்குள் ஒரு பில்லியன் அமெரிக்க டொலர் முதலீட்டு ஒப்பந்தங்கள் எதிர்பார்க்கப்பட்டதாகவும் ஆனால் கடந்த 6 மாதங்களில் முதலீட்டு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி ஏற்கனவே 800 மில்லியன் அமெரிக்க டொலர் வருமானம் கிடைத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இலங்கையின் ஏற்றுமதியை ஊக்குவிப்பதற்கான 27 திட்டங்கள் தற்போதும் செயற்படுத்தப்பட்டுள்ளன.

மேலும் துறைமுக நகரத்தில் 118 காணிப் பிரிவுகளில் 46 பிரிவுகள் சீன முகவர் நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ளன.

அத்துடன் துறைமுக நகர வேலைத்திட்டத்தை ஆரம்பிக்க தற்போது 21 நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக முதலீட்டு ஊக்குவிப்பு இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம குறிப்பிட்டுள்ளார்.