.webp)
புதிய நிர்வாக ஊழியர்களை இணைத்துகொள்வதற்காக தேர்தல்கள் ஆணைக்குழு விண்ணப்பங்களை கோரியுள்ளதாக தெரிவித்து போலியான விளம்பரமொன்று பகிரப்படுவதாக இலங்கை கணினி அவசர பிரிவு தெரிவித்துள்ளது.
இந்தப் போலியான விளம்பரத்தை பகிர்வதினை தவிர்க்குமாறு அதன் சிரேஷ்ட தகவல் பாதுகாப்பு பொறியியலாளர் சருக தமுனுபொல தெரிவித்துள்ளார்.
இதுவொரு சைபர் குற்றச்செயலாக இருக்கலாமெனவும் அதனூடாக உங்களின் தனிப்பட்ட தகவல்கள் வேறு நபர்களின் கைகளுக்கு செல்லும் அபாயம் காணப்படுவதாகவும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.