Colombo (News 1st) இங்கிலாந்து அணியின் முன்னாள் துடுப்பாட்ட வீரர் Graham Thorpe தனது 55ஆவது வயதில் இன்று(05) காலமானார்.
அவர் 1993 முதல் 2005ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் இங்கிலாந்து அணிக்காக 100 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளார்.
அவர் தனது கிரிக்கெட் வாழ்க்கையில் 16 சதங்கள் அடங்கலாக 6744 டெஸ்ட் ஓட்டங்களை பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.