2024 பெரிஸ் ஒலிம்பிக் விழாவில் மகளிருக்கான 800 மீற்றர் ஓட்டப் போட்டியின் ரெபசார்ஜ் சுற்றின் நான்காவது போட்டியில் இலங்கையின் தருஷி கருணாரத்ன 7ஆம் இடத்தை அடைந்தார்.
இந்தப் போட்டிப் பிரிவில் நேற்று(02) முதல் சுற்றின் ஆறாவது போட்டியில் நேற்றிரவு பங்கேற்ற தருஷிக்கு 8ஆம் இடம் கிடைத்தது.
இதனால் அவரால் மகளிருக்கான 800 மீற்றர் ஓட்டப் போட்டியில் நேரடியாக இறுதிப் போட்டிக்கு தகுதிபெற முடியவில்லை.
ஒலிம்பிக் வரலாற்றில் முதன்முறையாக பெரிஸ் ஒலிம்பிக்கில் தேர்ந்தெடுக்கப்பட்ட சில ஓட்டப் போட்டிகளின் லீக் சுற்றுடன் வெளியேறும் போட்டியாளர்களுக்கு அரையிறுதி சுற்றுக்கான வாய்ப்பை மீண்டும் வழங்கும் வகையில் ரீபேச்சேஜ் (Repechage) என பெயரிடப்பட்டு வாய்ப்பு வழங்கப்பட்டது.
இந்தப் போட்டியில் முதலிடம் பிடிக்கும் வீராங்கனைக்கு மாத்திரம் அரைஇறுதியில் பங்கேற்பதற்கான சந்தர்ப்பம் கிடைக்கும்.
போட்டியை 2 நிமிடங்கள் 6.66 செக்கன்களில் பூர்த்திசெய்த தருஷி கருணாரத்ன 7ஆம் இடத்தை அடைந்தார்.