கலட்டுவாவ பகுதியில் அதிகூடிய மழைவீழ்ச்சி

கலட்டுவாவ பகுதியில் அதிகூடிய மழைவீழ்ச்சி - தென்மேற்கு பிராந்தியத்தில் எதிர்வரும் நாட்களில்

by Staff Writer 06-07-2024 | 2:28 PM

இன்று காலை 08.30 உடன் முடிவடைந்த 24 மணித்தியாலங்களில் கலட்டுவாவ பகுதியில் அதிகூடிய மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளது.

குறித்த பகுதியில் 150 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளது.

நாட்டின் தென்மேற்கு பிராந்தியத்தில் எதிர்வரும் நாட்களில் மழையுடனான வானிலை அதிகரிக்கும் சாத்தியம் உள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மேல், சப்ரகமுவ, வடமேல் மாகாணங்களிலும், கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இடைக்கிடையே மழை பெய்யுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஊவா மாகாணத்திலும் அம்பாறை, மட்டக்களப்பு மாவட்டங்களிலும் மாலை அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யுமென எதிர்வு கூறப்பட்டுள்ளது.

மத்திய மலைநாட்டின் மேற்கு மலைச்சரிவுகளிலும், வடக்கு, வடமத்திய, வடமேல் மாகாணங்களிலும் திருகோணமலை, ஹம்பாந்தோட்டை, ​மொனராகலை மாவட்டங்களிலும் மணிக்கு 40 முதல் 50 கிலோமீற்றர் வேகத்தில் காற்று வீசுமெனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, இரத்தினபுரி, களுத்துறை மாவட்டங்களின் சில பிரதேச செயலக பிரிவுகளுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

களுத்துறை மாவட்டத்தின் இங்கிரிய, மத்துகம, புளத்சிங்கள ஆகிய பிரதேச செயலக பிரிவுகளுக்கும் இரத்தினபுரி மாவட்டத்தின் அயகம, எஹெலியகொட, எலபாத்த, கிரிஎல்ல, குருவிட்ட, இரத்தினபுரி ஆகிய பிரதேச செயலக பிரிவுகளுக்கும் மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேல், சப்ரகமுவ, வடமேல் மாகாணங்களிலும், கண்டி, நுவரெலியா, காலி, மாத்தறை மாவட்டங்களிலும் இடைக்கிடை மழை பெய்யும் சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.