T20 தொடர் : தென்னாபிரிக்கா இறுதி போட்டிக்கு தகுதி

T20 உலகக் கிண்ணத்தின் இறுதி போட்டிக்கு தகுதி பெற்ற தென்னாபிரிக்கா

by Chandrasekaram Chandravadani 27-06-2024 | 7:49 AM

Colombo (News 1st) இருபதுக்கு 20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில் ஆப்கானிஸ்தான் அணியை தோற்கடித்த தென்னாபிரிக்கா இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான இன்றைய அரையிறுதி போட்டியில் தென்னாபிரிக்கா 9 விக்கெட்களால் வெற்றி பெற்றது.

நாணய சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் துடுப்பெடுத்தாடிய ஆப்கானிஸ்தான் அணி, சகல விக்கெட்களையும் இழந்து 57 ஓட்டங்களை பெற்றது.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்கா, ஒரு விக்கெட் இழப்பிற்கு 60 ஓட்டங்களை பெற்று 9 விக்கெட்களால் வெற்றி பெற்றது.

ஏனைய செய்திகள்