கென்ய பாராளுமன்றுக்கு தீவைத்த ஆர்ப்பாட்டக்காரர்கள்

கென்ய பாராளுமன்றத்திற்கு தீ வைத்த ஆர்ப்பாட்டக்காரர்கள்

by Staff Writer 26-06-2024 | 5:35 AM

Colombo (News 1st) கென்யாவில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சிலரால் அந்நாட்டு பாராளுமன்றத்திற்கு தீ வைக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.

சர்ச்சைக்குரிய நிதிச் சட்டமூலத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதன்போது பாராளுமன்ற செங்கோலும் திருடப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

நாட்டின் பல பகுதிகளிலும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்ட நிலையில், தலைநகர் நைரோபியில் பாதுகாப்பு பிரிவினர் மற்றும் ஆர்ப்பாட்டக்காரர்கள் இடையில் இடம்பெற்ற மோதலில் ஐவர் உயிரிழந்துள்ளனர்.

அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி பராக் ஒபாமாவின் சகோதரியும் ஆர்ப்பாட்டக்காரர்களுடன் எதிர்ப்பில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்தநிலையில், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுபவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என கென்ய ஜனாதிபதி William Ruto தெரிவித்துள்ளார்.