கென்ய தலைநகரில் வலுப்பெற்றுள்ள மக்கள் போராட்டம்

வரி அதிகரிப்பிற்கு எதிராக கென்ய தலைநகரில் வலுப்பெற்றுள்ள மக்கள் போராட்டம்

by Bella Dalima 25-06-2024 | 4:10 PM

Colombo (News 1st) கென்ய தலைநகர் நைரோபியில் (Nairobi) வரி அதிகரிப்பு முன்மொழியப்பட்டுள்ள நிலையில், அங்கு மக்கள் போராட்டம் வலுவடைந்துள்ளது. 

ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள நிலையில், அவர்களை கலைக்க பொலிஸார் கண்ணீர்ப்புகை மற்றும் நீர்த்தாரை பிரயோகம் மேற்கொண்டுள்ளனர். 

கென்ய பாராளுமன்றத்தில் வரி அதிகரிப்பு தொடர்பான விவாதம் நடைபெற்ற நிலையில், பாராளுமன்றம், குடியரசுத் தலைவர் அலுவலகம் உள்ளிட்ட முக்கிய இடங்கள் மூடப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசாங்கத்திற்கு எதிரான இந்த போராட்டத்தில் இணையுமாறு பொதுமக்களுக்கு ஏற்பாட்டாளர்களால் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. 

மேலும், அதிபர் வில்லியம் ரூட்டோ (William Ruto) பதவி விலக வேண்டும் என போராட்டக்காரர்கள் வலியுறுத்தி வருகின்றனர். 

எவ்வாறாயினும், ஆர்ப்பாட்டக்காரர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபடத் தயார் என ஜனாதிபதி வில்லியம் ரூட்டோ அறிவித்திருந்த நிலையில், ஜனாதிபதி தீர்வுகளை பொதுவௌியில் அறிவிக்க வேண்டுமென ஆர்ப்பாட்டக்காரர்கள் வலியுறுத்தியுள்ளனர்.