தேசிய கராத்தே வீரர்கள் தெரிவு கொழும்பில் ஆரம்பம்

தெற்காசிய மற்றும் ஆசிய கராத்தே சுற்றுப் போட்டிகளில் பங்கேற்கவுள்ள தேசிய கராத்தே வீரர்களை தெரிவு செய்யும் போட்டிகள் ஆரம்பம்

by Staff Writer 24-06-2024 | 5:08 PM

Colombo (News 1st) 2024ஆம் ஆண்டுக்கான தெற்காசிய மற்றும் ஆசிய கராத்தே சுற்றுப் போட்டிகளில் பங்கேற்கவுள்ள தேசிய கராத்தே வீரர்களை தெரிவு செய்யும் போட்டிகள் கொழும்பில் இன்(24) ஆரம்பமாகின.

தேசிய கராத்தே தெரிவுக்குழு தலைவர் அன்ரோ தினேஷ், உறுப்பினர்களான மனோஜ் உனந்தென்ன, தமித் பண்டார விஜேகோன், சி.ஜே.சமரசேகர மற்றும் அனுர ரத்னதேவ ஆகியோர்  தலைமையில் தேசிய கராத்தே வீரர்கள் தெரிவு நடைபெற்றது.

பூட்டானில் நடைபெறவுள்ள தெற்காசிய கராத்தே சுற்றுப் போட்டி மற்றும் பிலிப்பைன்ஸில் நடைபெறவுள்ள ஆசிய கராத்தே சுற்றுப் போட்டிகளில் கலந்துகொள்ளவுள்ள தேசிய கராத்தே வீரர்களை தெரிவுசெய்யும் போட்டியாக இது அமைந்தது.
                                           
ஸ்ரீ லங்கா கராத்தே தோ சம்மேளனத்தின் தலைவர் H.M.சிசிரகுமார, பொதுச் செயலாளர் B.M.கீர்த்திகுமார மற்றும் நடுவர் குழாம் தலைவர் R.J.அலெக்சான்டர் ஆகியோரும் இதன்போது  பிரசன்னமாகியிருந்தனர்.

ஏனைய செய்திகள்