திமுதுகம வாகன விபத்தில் ஒருவர் உயிரிழப்பு

திமுதுகம வாகன விபத்தில் ஒருவர் உயிரிழப்பு

by Staff Writer 17-06-2024 | 1:56 PM

Colombo (News 1st) திருகோணமலை - மட்டக்களப்பு வீதியின் திமுதுகம பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

திருகோணமலையிலிருந்து மட்டக்களப்பு நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள், குறுக்கு வீதியில் பயணித்த மற்றுமொரு மோட்டார் சைக்கிளுடன் மோதி விபத்திற்குள்ளாகியுள்ளது.

விபத்தில் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்களும் பின்னால் அமர்ந்திருந்தவர்களும் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

எவ்வாறாயினும் அவர்களில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கிண்ணியா இலக்கம் 3, பைசர் நகரைச் சேர்ந்த 53 வயதான ஒருவரே விபத்தில் உயிரிழந்துள்ளார்.

சீனக்குடா பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.