11 மாத குழந்தையின் உயிரை பறித்த தேங்காய்

by Staff Writer 16-06-2024 | 4:27 PM

Colombo (News 1st) கலஹா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தெல்தோட்டை நாராஹின்ன தோட்ட பகுதியில் 11 மாத குழந்தையொன்று உயிரிழந்துள்ளது.

லோகேஸ்வரன் இராமச்சந்திரன் - மது தம்பதியினரின் ஒரேமகளான லோகேஸ்வரன் கியாஸ்சினி தலையில் தேங்காய் வீழ்ந்ததில் உயிரிழந்துள்ளார்.

குழந்தையுடன் தந்தை அந்த பகுதியிலுள்ள நண்பரின் வீட்டுக்கு சென்று வீடு திரும்பிக்கொண்டிருந்த சந்தர்ப்பத்தில் இந்த துயரச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

குழந்தையின் தலையில் காயம் ஏற்பட்ட நிலையில் உடனடியாக தெல்தோட்டை பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் மேலதிக சிகிச்சைக்காக பேராதெனிய வைத்தியசாலையில் மாற்றப்பட்டுள்ளார்.

எனினும், சிகிச்சை பலனின்றி லோகேஸ்வரன் கியாஸ்சினி உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கலஹா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.