Brotherless Night நாவலுக்கு Women’s Prize விருது

இலங்கையின் வாசுகி கணேசநாதன் எழுதிய Brotherless Night நாவலுக்கு Women’s Prize விருது

by Staff Writer 16-06-2024 | 4:28 PM

Colombo (News 1st) இலங்கை வம்சாவளியும் அமெரிக்க எழுத்தாளருமான வாசுகி கணேசநாதன் இந்த ஆண்டுக்கான புனைக்கதை நாவலுக்கான Women’s Prize விருதை வெற்றி கொண்டுள்ளார்.

29ஆவது Women’s Prize வெற்றியாளர்களை அறிவிக்கும் நிகழ்வு கடந்த 13ஆம் திகதி மத்திய லண்டனின் Bedford Square Gardens -இல் நடைபெற்றது.

Women’s Prize ஸ்தாபகரும் எழுத்தாளருமான Kate Mosse தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வின்போது புனைக்கதை பிரிவு மற்றும் புனைக்கதை அல்லாத பிரிவு ஆகியவற்றுக்கான வெற்றியாளர்கள் அறிவிக்கப்பட்டனர்.

இலங்கையின் உள்நாட்டு யுத்தத்தை அடிப்படையாகக் கொண்டு சுகி கணேசநாதன் எழுதிய Brotherless Night'  நாவல் சிறந்த புனைக்கதைக்கான Women’s Prize விருதுக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த வெற்றிக்காக சுகி கணேசநாதனுக்கு 30,000 யூரோக்கள் வழங்கப்படவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.