மழையுடனான வானிலை நீடிக்கும்

மழையுடனான வானிலை நீடிக்கும் - வளிமண்டலவியல் திணைக்களம்

by Staff Writer 30-05-2024 | 7:53 AM

Colombo (News 1st) நாட்டில் நிலவும் கடும் காற்று மற்றும் பலத்த மழையுடனான வானிலை தொடர்ந்தும் நீடிக்கலாம் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் நுவரெலியா மாவட்டத்தின் சில பகுதிகளிலும் 75 மில்லிமீட்டர் மழைவீழ்ச்சி பதிவாகுமென திணைக்களம் தெரிவித்துள்ளது.

பலத்த மழையுடனான வானிலையால் 20 மாவட்டங்களில் 26,524 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக இடர்முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

ஊவா மாகாணத்திலும் அம்பாறை, மட்டக்களப்பு மாவட்டங்களின் சில பிரதேசங்களிலும் மாலை அல்லது இரவு வேளையில் மழை அல்லது இடியுடன்கூடிய மழை பெய்யுமென எதிர்பார்க்கப்படுவதாக திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை, கொழும்பு, காலி, கேகாலை, நுவரெலியா மற்றும் இரத்தினபுரி ஆகிய 5 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள மண்சரிவு அபாய எச்சரிக்கை தொடர்ந்தும் அமுலிலுள்ளது.