புதிய அரசியல் கூட்டணி ஸ்தாபிப்பு

புதிய அரசியல் கூட்டணி ஸ்தாபிப்பு

by Staff Writer 27-05-2024 | 2:19 PM

Colombo (News 1st) 'சர்வசன அதிகாரம்' என்ற பெயரில் புதிய அரசியல் கூட்டணி இன்று(27) ஸ்தாபிக்கப்பட்டுள்ளது.

''ஒன்றிணைந்து கட்டியெழுப்பும் நாடு - மகிழ்ச்சி நிறைந்த நாடு” என்ற தொனிப்பொருளின் கீழ் இந்த கூட்டணி அமைக்கப்பட்டுள்ளது.

மவ்பிம ஜனதா கட்சியின் தலைவர், தொழிலதிபர் திலித் ஜயவீர, தேசிய சுதந்திர முன்னணி சார்பில் விமல் வீரவங்ச, பிவித்துறு ஹெல உறுமய  சார்பில் உதய கம்மன்பில, ஜனநாயக இடதுசாரி முன்னணியின் டி.வி.டி.திலகசிறி, இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி ஜீ.வீரசிங்க, யுதுகம அமைப்பின் ஏற்பாட்டாளர் கெவிந்து குமாரதுங்க ஆகியோர் இணைந்து புதிய அரசியல் கூட்டணிக்கான உடன்படிக்கையில் இன்று கைச்சாத்திட்டுள்ளனர்.

இதனை தவிர, சுயாதீனமாக செயற்படும் சன்ன ஜயசுமனவும் அதில் கைச்சாத்திட்டுள்ளார்.

இந்த கூட்டணிக்கான உடன்படிக்கையில் கைச்சாத்திடும் நிகழ்வு கொழும்பில் இன்று(27) காலை இடம்பெற்றது.