உயிரிழந்தோர் எண்ணிக்கை 7 ஆக அதிகரிப்பு

மழை அனர்த்தங்களால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 7 ஆக அதிகரிப்பு; 13 பேர் காயம்

by Bella Dalima 25-05-2024 | 3:32 PM

Colombo (News 1st) பலத்த மழையுடனான வானிலையால் ஏற்பட்ட அனர்த்தங்களில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 7 ஆக அதிகரித்துள்ளதுடன், 13 பேர் காயமடைந்துள்ளனர்.

18 மாவட்டங்களில் 12,197 குடும்பங்களை சேர்ந்த 45,344 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

புத்தளம் மாவட்டமே அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளதுடன், அங்கு 3455 குடும்பங்களை சேர்ந்த 11,815 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக நிலையம் குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை கொழும்பு, கம்பஹா, களுத்துறை, கண்டி, கேகாலை, நுவரெலியா, இரத்தினபுரி ஆகிய 7 மாவட்டங்களின் சில பிரதேச செயலக பிரிவுகளுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கை தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளது.