ரயில் சேவைகள் பல இரத்து

மலையக ரயில் மார்க்கத்தில் ரயில் சேவைகள் பல இரத்து

by Staff Writer 25-05-2024 | 2:57 PM

Colombo (News 1st) மலையக ரயில் மார்க்கத்தின் பல இடங்களில் மரங்கள் முறிந்து வீழ்ந்துள்ளதால், இன்றும் ரயில் சேவைகளுக்கு இடையூறு ஏற்பட்டுள்ளது.

கடுகன்னாவை பகுதியில் மரமொன்று முறிந்து வீழ்ந்தமையினால், கொழும்பிலிருந்து பதுளை நோக்கிச் செல்லும் பொடி மெனிக்கே ரயில் குறித்த பகுதியில் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.

இதல்கஸ்ஹின்ன பகுதியில் மரமொன்று முறிந்து வீழ்ந்தமையினால், பதுளையிலிருந்து கொழும்பு நோக்கி பயணிக்கும் உடரட்ட மெனிக்கே ரயில் சேவையும் பாதிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, அதிக மழை மற்றும் காற்றுடனான வானிலையினால் ரயில் மார்க்கங்களில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை கருத்திற்கொண்டு கொழும்பு - பதுளைக்கிடையிலான இரண்டு இரவு நேர தபால் சேவைகளும் இரத்து செய்யப்பட்டுள்ளன.

இதனிடையே, பதுளையில் இருந்து கொழும்பிற்கு செல்லும் வீதியில் தியத்தலாவைக்கும் ஹப்புத்தளைக்கும் இடையிலான போக்குவரத்து மீண்டும் தடைப்பட்டுள்ளது. 

எனவே, பண்டாரவளையில் இருந்து ஹப்புத்தளை செல்லும் மேல் வீதியை பயன்படுத்துமாறு வாகன சாரதிகளிடம் பொலிஸார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.