இரத்தினபுரி கேரகலயில் அதிகூடிய மழைவீழ்ச்சி

தெதுருஓயா நீர்த்தேக்கத்தின் 6 வான்கதவுகள் திறப்பு; இரத்தினபுரி கேரகலயில் அதிகூடிய மழைவீழ்ச்சி

by Bella Dalima 25-05-2024 | 3:13 PM

Colombo (News 1st) அதிக மழையுடனான வானிலையினால் தெதுருஓயா நீர்த்தேக்கத்தின் 6 வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளன.

தாழ்நிலப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் இது தொடர்பில் அவதானத்துடன் இருக்க வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இன்று (25) காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணித்தியாலங்களில் அதிகூடிய மழைவீழ்ச்சி இரத்தினபுரி மாவட்டத்தின் கேரகல பகுதியில் பதிவாகியுள்ளது.

அங்கு 185.2 மில்லிமீட்டர் மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளது.

மொரலியஓயாவில் 143.8 மில்லிமீட்டர் மழைவீழ்ச்சியும் நிக்கவரெட்டியவில் 100.4 மில்லிமீட்டர் மழைவீழ்ச்சியும் பதிவாகியுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இன்றும் நாட்டின் பல பகுதிகளில் பலத்த மழை பெய்யுமென திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

இதற்கமைய, சப்ரகமுவ மாாகாணத்திலும் நுவரெலியா மாவட்டத்தின் சில இடங்களிலும் 100 மில்லிமீட்டருக்கும் அதிக மழைவீழ்ச்சி பதிவாகுமென வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மேல், வடமேல் மாகாணங்களிலும் கண்டி, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் 75 மில்லிமீட்டர் மழைவீழ்ச்சி பதிவாகுமெனவும் திணைக்களம் கூறியுள்ளது.