டெங்கு நோயாளர்கள் பதிவாகும் வீதம் அதிகரிப்பு

டெங்கு நோயாளர்கள் பதிவாகும் வீதம் மீண்டும் அதிகரிப்பு

by Staff Writer 25-05-2024 | 4:08 PM

Colombo (News 1st) கொழும்பு, கம்பஹா, இரத்தினபுரி உள்ளிட்ட 8 மாவட்டங்களில் டெங்கு நோயாளர்கள் பதிவாகும் வீதம் மீண்டும் அதிகரித்துள்ளது.

நிலவும் மழையுடனான வானிலை காரணமாக டெங்கு நோயாளர்கள் பதிவாகும் வீதம் அதிகரித்துள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு தெரிவித்துள்ளது.

இந்நிலையில், 18 மாவட்டங்களில் எதிர்வரும் 27 ஆம் திகதி திங்கட்கிழமை முதல் தேசிய டெங்கு ஒழிப்பு வாரம் பிரகடனப்படுத்தப்படவுள்ளது.

முடியுமானவரை சுற்றுச்சூழலை சுத்தமாக வைத்திருக்குமாறு தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவு பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது.