யாழ்ப்பாணத்தில் ஜனாதிபதி தலைமையில் காணி உறுதிப்பத்திரங்கள் பகிர்ந்தளிப்பு

by Bella Dalima 24-05-2024 | 7:30 PM

Colombo (News 1st) “உறுமய” வேலைத்திட்டத்தின் கீழ் காணி உறுதிப்பத்திரம் வழங்கும் நிகழ்வு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில்  யாழ்ப்பாணத்தில் இன்று (24) மாலை நடைபெற்றது.

இதன்போது, யாழ். மாவட்டத்தின் 15 பிரதேச செயலகங்களையும் உள்ளடக்கி, 1286 பயனாளிகள் காணி உறுதிப்பத்திரங்களை பெறுவதற்கு தகுதி பெற்றிருந்தனர்.  

அவர்களுள் தெரிவுசெய்யப்பட்ட 322 பேருக்கு  காணி உறுதிப்பத்திரங்கள் இன்று வழங்கப்பட்டன. 

இந்த நிகழ்வில் வடக்கு மாகாண ஆளுநர் P.S.M.சார்ள்ஸ், கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, பாராளுமன்ற உறுப்பினர்களான தர்மலிங்கம் சித்தார்தன், ஜனாதிபதி சட்டத்தரணி M.A.சுமந்திரன், முன்னாள் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் உள்ளிட்ட அரச அதிகாரிகளும் பங்கேற்றிருந்தனர்.

வட மாகாணத்தின் முல்லைத்தீவு, கிளிநொச்சி, வவுனியா, மன்னார் மாவட்டங்களை உள்ளடக்கி "உறுமய" வேலைத்திட்டத்தின் கீழ் 13,858 காணி உறுதிப்பத்திரங்கள் வழங்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.