சிரசாநமாமி சிரச வெசாக் வலயம் இரண்டாவது நாளாக திறப்பு; அதிகளவிலான மக்கள் வருகை

by Bella Dalima 24-05-2024 | 7:01 PM

Colombo (News 1st) சிரசாநமாமி சிரச வெசாக் வலயம் இரண்டாவது நாளாக இன்றும் மக்களுக்காக திறக்கப்பட்டுள்ளது.

இன்றைய தினமும் அதிகளவிலான மக்கள் சிரச வெசாக் வலயத்திற்கு வருகை தந்தவண்ணமுள்ளனர்.

சிரச வெசாக் வலயத்தில் அமைக்கப்பட்டுள்ள அலங்காரப் பந்தல் இன்றும் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

கட்டாரி ஜாதகக் கதையை சித்தரிக்கும் வகையில், இந்த வெசாக் அலங்காரப் பந்தல்  நிர்மாணிக்கப்பட்டுள்ளது.

சிரச வெசாக் வலயத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள புத்த பகவானின் புனித சின்னங்கள்  மற்றும் புத்த பகவானின் பிரதம சீடர்களான செரியுத் , முகலன் ஆகிய தேரர்களின் புனித சின்னங்களை வழிபடுவதற்கு இன்று மதியம் 12 மணியிலிருந்து மக்களுக்கு சந்தர்ப்பம் கிட்டியது. 

வரலாற்று சிறப்பு மிக்க கூரகல ரஜமஹா விஹாரையில் இருந்து கொண்டுவரப்பட்ட புத்த பகவானின் புனித சின்னங்களும், கொழும்பு மாளிகாகந்த அக்ரஷ்ராவக்க மகா விஹாரையில் இருந்து கொண்டுவரப்பட்ட புத்த பகவானின் பிரதம சீடர்களான செரியுத் ,முகலன் ஆகிய தேரர்களின் புனித சின்னங்களும் சிரச வெசாக் வலயத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன.

புனித சின்னங்களை வழிபடுவதற்காக வரும் மக்களுக்கு அன்னாதானமும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

சிரசாநமாமி வெசாக் வலயம்,  கொழும்பு 02, பிரேப்ரூக் பிளேஸில் அமைந்துள்ள நியூஸ்ஃபெஸ்ட் தலைமையகத்தில் எதிர்வரும் 26 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.