பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு 1,700 ரூபா சம்பளம்

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு 1,700 ரூபா சம்பளம் - புதிய வர்த்தமானி வௌியீடு

by Staff Writer 23-05-2024 | 12:44 PM

Colombo (News 1st) பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான சம்பள உயர்வு தொடர்பான அதிவிசேட வர்த்தமானி வௌியிடப்பட்டுள்ளது.

2024 மே மாதம் 21ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் வௌியிடப்பட்டுள்ள இந்த அதிவிசேட வர்த்தமானியில் நாளாந்த சம்பளமாக 1,350 ரூபா அறிவிக்கப்பட்டுள்ளது.

நாளாந்த விசேட கொடுப்பனவாக 350 ரூபா வழங்கப்படவுள்ளதுடன், நாளாந்த மொத்த கொடுப்பனவாக 1,700 ரூபா வழங்கப்படவுள்ளதாக வர்த்தமானியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலதிக கொழுந்து கிலோகிராம் ஒன்றுக்கு 80 ரூபா வீதம் வழங்கப்பட வேண்டுமென தொழில் மற்றும் வௌிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சின் செயலாளரின் கையொப்பத்துடன் வௌியிடப்பட்டுள்ள அதிவிசேட வர்த்தமானியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை, தவறான முகாமைத்துவம் காரணமாக தொழிலாளர்களின் சம்பளத்தை செலுத்தத் தவறும் பெருந்தோட்ட நிறுவனங்களுக்கான காணி குத்தகை உடன்படிக்கையை இரத்து செய்வது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது.

அத்தகைய தோட்டக் கம்பனிகளுடனான காணிக் குத்தகை உடன்படிக்கையை இரத்து செய்யக்கூடிய வகையில் சட்டங்களை அறிமுகப்படுத்துவதற்கான படிமுறைகளை மேற்கொள்வதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.