மூன்று நாட்களுக்குள் 49,000 மின் விநியோகத் தடைகள்

நாடு முழுவதிலும் மூன்று நாட்களுக்குள் 49,000 மின் விநியோகத் தடைகள் பதிவு

by Bella Dalima 23-05-2024 | 3:48 PM

Colombo (News 1st) நாடு முழுவதிலும் மூன்று நாட்களுக்குள் 49,060 மின் விநியோகத் தடைகள் பதிவாகியுள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

இதனால், 1,77,000-இற்கும் அதிகமான மின் பாவனையாளர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக அமைச்சர்  X தளத்தில் பதிவிட்டுள்ளார்.

மின் விநியோகத்தை வழமைக்கு கொண்டு வருவதற்கான நடவடிக்கைகளுக்காக மேலதிக ஊழியர்கள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

மின் விநியோக துண்டிப்பு தொடர்பில் 1987 எனும் இலங்கை மின்சார சபையின் அவசர தொலைபேசி இலக்கத்திற்கு அறிவிக்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.