சீரற்ற வானிலையால் மின் விநியோகத் தடை - CEB

சீரற்ற வானிலையால் மின் விநியோகத் தடை - மின்சார சபை

by Staff Writer 23-05-2024 | 10:27 AM

Colombo (News 1st) சீரற்ற வானிலை காரணமாக கடந்த 3 நாட்களுக்குள் 36,900 மின் விநியோகத் தடைகள் பதிவாகியுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

இதனால் 3 இலட்சத்துக்கும் அதிகமான மின் பாவனையாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மின் விநியோகத் தடையை வழமைக்கு கொண்டு வருவதற்காக மேலதிக ஊழியர்கள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தனது X தளத்தில் பதிவிட்டுள்ளார்.

1987 எனும் இலங்கை மின்சார சபையின் அவசர தொலைபேசி இலக்கத்தை தொடர்புகொள்ள முடியாமல் போனால், 1987 என்ற இலக்கத்திற்கு குறுஞ்செய்தி(SMS) மூலம் அல்லது http://cebcare.ceb.lk என்ற இணையத்தளத்திற்கு பிரவேசிப்பதன் மூலம் மின்விநியோகத் தடை தொடர்பில் அறிவிக்க முடியும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.