கொழும்பில் விசேட போக்குவரத்து

by Chandrasekaram Chandravadani 23-05-2024 | 2:05 PM

Colombo (News 1st) கொழும்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள வெசாக் பண்டிகையை முன்னிட்டு விசேட போக்குவரத்து ஒழுங்குகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

கொழும்பு நகரில் 5 விசேட வெசாக் வலயங்கள் அமைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பிரதி பொலிஸ்மா அதிபர் சட்டத்தரணி நிஹால் தல்தூவ தெரிவித்துள்ளார்.

இதனால் வாகன போக்குவரத்து மட்டுப்படுத்தப்படும் என அவர் கூறியுள்ளார்.

கங்காராம சுற்றுவட்டத்திலுள்ள வீதிகளில் போக்குவரத்து மட்டுப்படுத்தப்படவுள்ளது.

இதேவேளை, காலிமுகத்திடல் பகுதியில் வாகனங்களை நிறுத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. 

இம்முறை வெசாக் பண்டிகையை முன்னிட்டு பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக சுமார் 40,000 பாதுகாப்பு பிரிவினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

புலனாய்வு அதிகாரிகளும் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டார்.