கராப்பிட்டிய வைத்தியசாலை தரமுயர்த்தப்பட்டுள்ளது

காலி கராப்பிட்டிய போதனா வைத்தியசாலை தேசிய வைத்தியசாலையாக தரமுயர்த்தப்பட்டுள்ளது

by Bella Dalima 23-05-2024 | 3:02 PM

Colombo (News 1st) காலி கராப்பிட்டிய போதனா வைத்தியசாலை தேசிய வைத்தியசாலையாக தரமுயர்த்தப்பட்டுள்ளது.

சுகாதார அமைச்சர் டொக்டர் ரமேஷ் பத்திரண முன்வைத்த யோசனைக்கு அமைய, அமைச்சரவையினால் இதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இவ்வருட இறுதிக்குள் வைத்தியசாலையின் படுக்கை வசதியை 2,858 ஆக அதிகரிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

இதற்கமைய, காலி கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையானது கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு பின்னர் இரண்டாவது தேசிய வைத்தியசாலையாக அறிவிக்கப்பட்டுள்ளது.