புலமைப்பரிசில் பரீட்சைக்கு Online விண்ணப்பம்

மே 27 முதல் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்கு ஒன்லைன் முறையூடாக விண்ணப்பிக்கலாம்

by Bella Dalima 22-05-2024 | 6:58 PM

Colombo (News 1st) 2024 ஆம் ஆண்டிற்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்கு ஒன்லைன் முறையூடாக விண்ணப்பங்களை கோரும் நடவடிக்கை எதிர்வரும் 27 ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளது.

இதற்கிணங்க, எதிர்வரும் 27 ஆம் திகதி  முதல் ஜூன் 14 ஆம் திகதி நள்ளிரவு 12 மணி முதல் விண்ணப்பங்களை அனுப்ப முடியும் என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

விண்ணப்பங்களை ஏற்கும் திகதி நீடிக்கப்பட மாட்டாதெனவும் பரீட்சைகள் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

5 ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சை எதிர்வரும் செப்டம்பர் 15 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ளது.