காஸா சிறுவர்கள் நிதியத்திற்கு 40 மில்லியன் ரூபா நன்கொடை

by Bella Dalima 22-05-2024 | 8:09 PM

Colombo (News 1st) காஸா சிறுவர்கள் நிதியத்திற்கு  40 மில்லியன் ரூபா நன்கொடை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் நேற்று (21) கையளிக்கப்பட்டுள்ளது.

சீனங்கோட்டை பள்ளிவாசல் சங்கம்,  சீனங்கோட்டை இரத்தினக்கற்கள் மற்றும் ஆபரண வர்த்தகர்கள் சங்கம் உள்ளிட்ட பலரது நிதிப்பங்களிப்புடன் காஸா சிறுவர் நிதியத்திற்கு 40,198,902 ரூபா நன்கொடையாக வழங்கப்பட்டுள்ளது.

சீனங்கோட்டை  இரத்தினக்கற்கள் மற்றும் ஆபரண வர்த்தக சங்கத்தின்  தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் மர்ஜான் பலீல் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம்  ஜனாதிபதி அலுவலகத்தில் இதற்கான காசோலையை நேற்று கையளித்தார்.