தோட்டத் தொழிலாளர்களை சிறு தேயிலை உற்பத்தியாளர்களாக மாற்றுவேன்: தலவாக்கலையில் சஜித் பிரேமதாச வாக்குறுதி

by Bella Dalima 01-05-2024 | 5:23 PM

Colombo (News 1st) ஐக்கிய மக்கள் சக்தியில் அங்கம் வகிக்கும் தொழிலாளர் தேசிய சங்கத்தின் மே தின கூட்டம் தலவாக்கலை நகர சபை மைதானத்தில் இன்று (01) நடைபெற்றது.

இந்த மே தின கூட்டம் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் நடைபெற்றது. 

தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவர் பழனி திகாம்பரம், பிரதி தலைவர் எம். உதயகுமார், முன்னாள் அமைச்சர் அர்ஜூன ரணத்துங்க உள்ளிட்ட பலர்  இந்த கூட்டத்தில் கலந்து கொண்டிருந்தனர்.

இதன்போது உரையாற்றிய எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, மலையக சமூகத்தின் மொழி உரிமையை பாதுகாத்து, நிலம் மற்றும் வீட்டு உரிமையை வழங்குவதாக உறுதியளித்தார். 

தோட்டத்தொழிலாளர்களை சிறு தேயிலை உற்பத்தியாளர்களாக மாற்றுவதாகவும் அவர்கள் கௌரவமாக நாட்டில் வாழும் உரிமையை வழங்குவதாகவும் சஜித் பிரேமதாச மேலும் வாக்குறுதி வழங்கினார். 
 

ஏனைய செய்திகள்