விசா கட்டண விலக்கு மேலும் நீடிப்பு

7 நாடுகளின் சுற்றுலா பயணிகளுக்கான விசா கட்டண விலக்கு மேலும் நீடிப்பு

by Staff Writer 03-04-2024 | 7:07 AM

Colombo (News 1st) ஏழு நாடுகளில் இருந்து இலங்கைக்கு வருகை தரும் சுற்றுலா பயணிகளுக்கான விசா கட்டண விலக்கு மேலும் ஒருமாத காலத்திற்கு நீடிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் 30ஆம் திகதி வரையில் இந்த நடைமுறை அமுலில் இருக்கும் என சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபையின் தலைவர் பிரியந்த பெர்னாண்டோ தெரிவித்தார்.

இந்தியா, ரஷ்யா, சீனா, இந்தோனேசியா, தாய்லாந்து, ஜப்பான் மற்றும் மலேசியா ஆகிய நாடுகளில் இருந்து நாட்டிற்கு வருகை தரும் சுற்றுலா பயணிகளுக்கே இந்த சந்தர்ப்பம் கிட்டவுள்ளது.

சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்துள்ளமை காரணமாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் குறிப்பிட்டுள்ளார்.