ஜோர்தானிலிருந்து 60 தொழிலாளர்கள் நாட்டிற்கு வருகை

ஜோர்தானில் வேலைவாய்ப்பை இழந்த இலங்கை தொழிலாளர்கள் 60 பேர் நாட்டிற்கு வருகை

by Bella Dalima 09-02-2024 | 3:19 PM

Colombo (News 1st) ஜோர்தானில் இரண்டு ஆடைத்தொழிற்சாலைகள் மூடப்பட்டதன் காரணமாக வேலைவாய்ப்பை இழந்த இலங்கை தொழிலாளர்களில் 60 பேர் இன்று (09) அதிகாலை நாட்டை வந்தடைந்துள்ளனர்.

ஜோர்தானில் உள்ள இரண்டு ஆடை தொழிற்சாலைகள் மூடப்பட்டதால், 221 இலங்கை தொழிலாளர்கள் வேலைவாய்ப்பை இழந்துள்ளனர்.

இது தொடர்பில் ஜோர்தானுக்கான இலங்கை தூதரக அதிகாரிகள், அந்நாட்டு தொழில் அமைச்சின் அதிகாரிகளை அண்மையில் சந்தித்து கலந்துரையாடியதாகவும் விசா காலம் நிறைவடைந்தும் அங்கு தங்கியிருக்கும் தொழிலாளர்களை அபராதம் விதிக்காமல் நாட்டுக்கு திருப்பி அனுப்ப ஜோர்தான் அதிகாரிகள் இதன்போது இணக்கம் வௌியிட்டதாகவும்  வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் குறிப்பிட்டது.

அத்துடன், கடந்த வருடம் டிசம்பர் 31ஆம் திகதி வரையில் அவர்களுக்கு வழங்கப்படவிருந்த  சம்பள நிலுவைத் தொகையையும் வழங்குவதற்கு தொழிற்சாலை நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் குறிப்பிட்டுள்ளது.