Stent குழாய்களுக்கு பற்றாக்குறை

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் இருதய நோயாளர்களுக்காக வழங்கப்படும் Stent குழாய்களுக்கு பற்றாக்குறை

by Staff Writer 16-01-2024 | 7:42 AM

Colombo (News 1st) கொழும்பு தேசிய வைத்தியசாலையில் இருதய நோயாளர்களுக்காக வழங்கப்படும் Stent குழாய்களுக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளமையினால் நோயாளர்கள் கடும் அசௌகரியங்களுக்கு முகங்கொடுத்துள்ளனர்.

இதனால் இருதய நோயாளர்களின் உயிர்கள் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் ஊடகப் பேச்சாளர், வைத்தியர் சமில் விஜேசிங்க தெரிவித்தார். 

இதன் காரணமாக பெரும்பாலான நோயாளர்களை காத்திருப்புப் பட்டியலில் இணைக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது. 

இந்த விடயம் தொடர்பில், தேசிய வைத்தியசாலையின் பணிப்பாளர், வைத்தியர் குமார விக்கிரமசிங்கவிடம் வினவிய போது, Stent குழாய்களுக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தார். 

இது தொடர்பில் சுகாதார அமைச்சின் செயலாளர் விசேட வைத்தியர் பாலித மஹிபாலவிடம் வினவிய போது, Stent எனப்படும் குழாய்களுக்கு தற்போது பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதுடன், அவற்றை கொள்வனவு செய்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார்.