சர்வதேச மனித உரிமைகள் தினம் இன்று(10)

சர்வதேச மனித உரிமைகள் தினம் இன்று(10)

by Staff Writer 10-12-2023 | 2:33 PM

Colombo (News 1st) இன்று(10) சர்வதேச மனித உரிமைகள் தினமாகும். 

சர்வதேச மனித உரிமைகள் பிரகடனம் ஏற்றுக்கொள்ளப்பட்டு இவ்வருடத்துடன் 75 ஆண்டுகள் பூர்த்தியாகின்றன.

1948 ஆம் ஆண்டில் ஐக்கிய நாடுகள் பொதுச் சபையில் ஏற்றுக்கொள்ளப்பட்ட சர்வதேச மனித உரிமைகள் பிரகடனத்திற்கு அமைய ஆண்டு தோறும் டிசம்பர் 10 ஆம் திகதி சர்வதேச மனித உரிமைகள் தினமாக அனுஷ்டிக்கப்படுகிறது.

'அனைவருக்கும் சுதந்திரம், சமத்துவம், நீதி' எனும் தொனிப்பொருளில் இந்த ஆண்டுக்கான மனித உரிமைகள் தினம் அனுஷ்டிக்கப்படுகிறது.