Colombo (News 1st) சர்வதேச வர்த்தக சம்மேளனத்தின் தலைவர் மரியா பெர்னாண்டா கார்ஸா(Maria Fernanda Garza) ஐந்து நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு நாட்டிற்கு வருகை தந்துள்ளார்.
உலகளாவிய ரீதியில் 45 மில்லியன் வர்த்தக நிறுவனங்களின் நிறுவன உறுப்புரிமையை கொண்ட 170 நாடுகளை பிரதிநிதித்துவப்படுத்தும் சர்வதேச வர்த்தக சம்மேளனமானது, உலகின் பாரிய மற்றும் மிகவும் பலம் வாய்ந்த வர்த்தக அமைப்பாக கருதப்படுகின்றது.
ஐக்கிய நாடுகள் சபை, சர்வதேச வர்த்தக அமைப்பு மற்றும் உலக அறிவுசார் சொத்துரிமை அமைப்பு என்பனவற்றை பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரே வர்த்தக அமைப்பாக சர்வதேச வர்த்தக சம்மேளனம் காணப்படுகின்றது.
நாட்டை வந்தடைந்துள்ள மரியா பெர்னாண்டா கார்ஸாவை இலங்கை வர்த்தக சம்மேளனத்தின் தலைவர் ஷனில் அன்டனி பெர்னாண்டோ உள்ளிட்ட குழுவினர் வரவேற்றனர்.
சர்வதேச வர்த்தக சம்மேளனத்தின் தலைவரொருவர் இலங்கைக்கு வருகைதரும் முதலாவது சந்தர்ப்பம் இதுவாகும்.