Colombo (News 1st) கடன் வட்டியை அதிகரிக்கும் தீர்மானத்தை தற்காலிகமாக இடைநிறுத்துவதாக மக்கள் வங்கி அறிவித்துள்ளது.
வாடிக்கையாளர்களின் கோரிக்கைகளை ஆராய்ந்து இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மக்கள் வங்கியின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
முன்னதாக மக்கள் வங்கியினால் வழங்கப்பட்டிருந்த கடன்களுக்கான வட்டி வீதம் ஜனவரி முதலாம் திகதி முதல் அமுலாகும் வகையில் 15.5 வீதம் வரை அதிகரிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.