மரக்கறிகளின் விலைகள் மீண்டும் அதிகரிப்பு

மரக்கறிகளின் விலைகள் மீண்டும் அதிகரிப்பு

by Chandrasekaram Chandravadani 27-12-2022 | 10:02 AM

Colombo (News 1st) கடந்த நாட்களுடன் ஒப்பிடுகையில், மரக்கறிகளின் விலைகள் மீண்டும் அதிகரித்துள்ளன.

சில மரக்கறிகளின் விலைகள் 100 வீதத்தால் அதிகரித்துள்ளதாக தம்புள்ளை விசேட பொருளாதார மத்திய நிலையத்தின் வர்த்தக சங்க தலைவர் சாந்த ஏக்கநாயக்க தெரிவித்தார்.

நுவரெலியா உள்ளிட்ட சில மாவட்டங்களில் பெய்து வரும் பலத்த மழை காரணமாக மரக்கறிகளின் விலைகள் இவ்வாறு அதிகரித்துள்ளதாக அவர் கூறினார்.