Colombo (News 1st) இந்தியாவிற்கு எதிரான இரண்டாவது சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 5 ஓட்டங்களால் பங்களாதேஷ் அணி வெற்றி பெற்றது.
அதற்கமைய, தொடரில் 2-0 என முன்னிலையில் உள்ளது பங்களாதேஷ் அணி.
இன்றைய(07) போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் அணி, 07 விக்கெட் இழப்பிற்கு 271 ஓட்டங்களை பெற்றது.
பதிலுக்கு விளையாடிய இந்திய அணியினால் 09 விக்கெட் இழப்பிற்கு 266 ஓட்டங்களையே பெற முடிந்தது.