மறைமுக நிகழ்ச்சி நிரலை சீனா முன்னெடுத்துள்ளதா?

மறைமுக நிகழ்ச்சி நிரலை சீனா முன்னெடுத்துள்ளதாக யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் அறிக்கை

by Staff Writer 29-11-2022 | 4:24 PM

Colombo (News 1st) இலங்கையை கடன் பொறியில் சிக்க வைத்து அச்சுறுத்தி நாட்டை கைப்பற்றும் மறைமுக நிகழ்ச்சி நிரலை சீனா முன்னெடுத்து வருவதாக யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் தெரிவித்துள்ளது.

கடலட்டை பண்ணை என்ற போர்வையில் சீனா நேரடியாகவும் மறைமுகமாகவும் இலங்கை கடலின் பெரும் பகுதியை ஆக்கிரமித்துள்ளதாக  யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சீனா  தீங்கு விளைவிக்கும் பக்டீரியாக்களுடன் கூடிய மலக்கழிவுகளை இலங்கைக்கு உரமாக வழங்கியிருந்ததாக அதில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதனால், வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் உள்ள விவசாய நிலங்கள்  மற்றும் கடல் பரப்புகளை சீனாவிற்கு விற்பனை செய்வதற்கான இரகசிய  ஒப்பந்தங்கள்  உள்ளனவா  என்ற சந்தேகம் எழுந்துள்ளதாக யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் தெரிவித்துள்ளது.

நிலங்களையும் கடலையும்  மக்களின் விருப்பத்திற்கு மாறாக சீனாவிற்கு விற்க பல புரிந்துணர்வு ஒப்பந்தங்களை அரசாங்கம் மேற்கொண்டு வருவதாக மாணவர் ஒன்றியத்தின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

வௌிப்படைத்தன்மையற்ற மற்றும் சாத்தியமற்ற சீன கடன்கள் மூலமே இலங்கைக்கு தற்போதைய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.