Colombo (News 1st) சர்வ கட்சி அரசாங்கமொன்றை உருவாக்குவதற்கு மேலும் தாமதமாகும் பட்சத்தில், கூடிய விரைவில் இராஜாங்க அமைச்சர்களை நியமிக்குமாறு ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவை பிரதிநிதித்துவப்படுத்தும் முன்னாள் இராஜாங்க அமைச்சர்கள் குழு ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவை பிரதிநிதித்துவப்படுத்தும் முன்னாள் இராஜாங்க அமைச்சர்கள் குழுவினருக்கும் இடையில் இடம்பெற்ற சந்திப்பின் போதே இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் அனுமதியின் கீழ் முன்னாள் இராஜாங்க அமைச்சர்கள் குழுவினருக்கும் ஜனாதிபதிக்கும் இடையில் இந்த சந்திப்பு நடைபெற்றதாக ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சட்டத்தரணி சாகர காரியவசம் தெரிவித்தார்.
இதேவேளை, ஆளுங்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு இடையிலான கூட்டம் நாளை மாலை 5 மணிக்கு நடைபெறவுள்ளது.
இந்த கூட்டம், ஜனாதிபதி தலைமையில் நிதி அமைச்சில் நடைபெறவுள்ளது.