by Bella Dalima 08-07-2022 | 5:40 PM
Colombo (News 1st) 2023 ஆம் ஆண்டு முதலாம் வகுப்பிற்கு மாணவர்களை இணைத்துக்கொள்வதற்கான விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் இறுதி திகதி நீடிக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய, எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் முதலாம் திகதி வரை விண்ணப்பங்களை சமர்ப்பிக்க முடியும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலையில், பெற்றோர்களினால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளை கருத்திற்கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.