by Bella Dalima 08-07-2022 | 2:30 AM
Colombo (News 1st) அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் எதிர்ப்பு பேரணி களனியிலிருந்து ஆரம்பமாகி, பஞ்சிகாவத்தை சந்தியைக் கடந்துள்ளது.
நாளை (09) நடைபெறவுள்ள மாபெரும் எதிர்ப்பு போராட்டத்திற்கு வலுசேர்க்கும் வகையில், இந்த பேரணி முன்னெடுக்கப்படுகிறது.
இந்நிலையில், அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஆர்ப்பாட்டகாரர்களுக்கு கறுவாத்தோட்டம் பொலிஸ் பிரிவிலுள்ள வீதிகளுக்குள் பிரவேசிக்க தடை விதிக்குமாறு கோரி பொலிஸாரால் முன்வைக்கப்பட்ட கோரிக்கை நீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்டுள்ளது.