3 நாட்களில் மாத்திரம் பாராளுமன்றம் கூடவுள்ளது

அடுத்த வாரம் 3 நாட்களில் மாத்திரம் பாராளுமன்றம் கூடவுள்ளது

by Bella Dalima 30-06-2022 | 5:09 PM
Colombo (News 1st) தற்போது ஏற்பட்டுள்ள எரிபொருள் தட்டுப்பாட்டை கருத்திற்கொண்டு அடுத்த வாரம் பாராளுமன்றத்தை மூன்று நாட்களில் மாத்திரம் கூட்டுவதற்கு கட்சித் தலைவர்கள் தீர்மானித்துள்ளனர். இதன்படி ஜூலை 4, 5 மற்றும் 6 ஆம் திகதிகளில் மாத்திரம் பாராளுமன்றம் கூடவுள்ளது.